புதாதான், ஆகஸ்ட்.02-
சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சட்டமன்றம் வரும் செப்டம்பர் 16 கொண்டாடப்படவிருக்கும் மலேசிய தினத்திற்குப் பிறகு கலைக்கப்படலாம் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் கோடி காட்டியுள்ளார்.
சபா சட்டமன்றத்தின் ஐந்து ஆண்டு தவணைக் காலம் முடிவுறவிருக்கும் நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு மாநில தேர்தல் நடத்தப்படுவது மிகப் பொருத்தமானதாகும் என்று வெளியுறவு அமைச்சருமான முகமட் ஹசான் குறிப்பிட்டார்.