கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கதின் தவறுகளைக் கண்டறிவதற்கு 12 எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை அமைத்துள்ளன.
அன்வார் நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படும் சீர்திருத்த வாக்குறுதிகள் உட்படஅரசாங்கத்தின் மீது தவறுகளைக் கண்டுபிடிக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடவும் மொத்தம் 12 எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணியில் இணைந்துள்ளதாக பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
பெர்சத்து, பாஸ், கெராக்கான், பெஜுவாங், மூடா, எம்ஐபிபி எனப்படும் பார்தி ரக்யாட் இந்தியா மலேசியா, புத்ரா, பிபிபி எனப்படும் மலேசிய மக்கள் முற்போக்கு கட்சி, பெர்ஜாசா எனப்படும் பாரிசான் ஜெமாஆ இஸ்லாமியா செ-மலேசியா, மலேசிய சோஷலிச கட்சி, மலேசிய முன்னனேற்றக் கட்சி, மற்றும் பார்தி இந்தியா முஸ்லீம் நேஷனல் ஆகியவை அந்த கட்சிகளில் அடங்கும் என்று முகைதீன் விளக்கினார்.
இந்த 12 கட்சிகளின் புதிய கூட்டணியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.