Aug 27, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் நடத்தியது போதும்  மக்களுக்கு சேவையாற்றுவீர் சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து
அரசியல்

அரசியல் நடத்தியது போதும் மக்களுக்கு சேவையாற்றுவீர் சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

Share:

அரசியல் நடத்தியது போதும், மாநிலத்திற்கும் மக்களுக்கும் சேவையாற்ற முற்படுங்கள் என்று மக்கள் பிரதிநிதிகளை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார்.

அரசியல் போதும், மக்கள் சோர்வு அடைந்துவிட்டனர், தாமும் அதைக் கேட்டு அலுத்துவிட்டதாக சுல்தான் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பதை விடுத்து மாநிலம், நாடு மற்றும் மக்களின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தினார்.

இன்று கிள்ளான், இஸ்தானா அலாம் ஷா அரண்மனையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு சடங்கிற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் சுல்தான் ஷராபுதீன் இந்த நினைவுறுத்தலை வழங்கினார்.

Related News