Oct 17, 2026
Thisaigal NewsYouTube

டொனால்டு டிரம்பின் வெற்றி, குறிப்பிடத்தக்க அரசியல் எழுச்சியாகு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டொனால்டு டிரம்பின் வெற்றி, குறிப்பிடத்தக்க அரசியல் எழுச்சியாகு

கோலாலம்பூர், நவ.6-

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் டொனால்டு டிரம்பின் குறிப்பிடத்தக்க அரசியல் எழுச்சியின் மூலம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் அவருக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

இந்த புதிய அத்தியாயமானது, புதுப்பிக்கப்பட வேண்டிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு இலக்கை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பிற்கான முன்னெடுப்புக்குரிய நகர்வுகளுக்கு மலேசியா தயாராக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மலேசியாவும், அமெரிக்காவும் மக்களுக்கு பரஸ்பர நன்மைகளை கொண்டு வருவதற்கு புதிய அதிபருடன் மலேசியா நெருக்கமாக பணியாற்றும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு ஆதாரமாக அமெரிக்கா விளங்கிறது. அதுமட்டுமின்றி ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது என்று டத்தோஸ்ரீ அன்வார் வர்ணித்தார்.

2025 ஆம் ஆண்டில் ஆசியானின் தலைவர் என்ற முறையில் மலேசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடான தனது ஈடுபாட்டிற்கு புதிய வாழ்வியல் சுவாசத்தை அமெரிக்கா கொடுக்கும் என்று தாம் நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் பாலஸ்தீனம் மற்றும் உக்ரைனில் வன்முறை மற்றும் பயங்கரவாத உயிர் இழப்புக்களை தடுக்க அமெரிக்கா தனது செல்வாக்கை கணிசமான அளவில் பயன்படுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக்கொண்டார்..

78 வயதான டொனால்டு டிரம்ப், 2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து, அந்த நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

டொனால்டு டிரம்புக்கு 277 வாக்குகளும், கமலா ஹாரிசுக்கு 224 வாக்குகளும் கிடைத்தன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு: மந்திரி பெசாரிடம் விளக்கம் கோருகிறது பிகேஆர்

நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு: மந்திரி பெசாரிடம் விளக்கம் கோருகிறது பிகேஆர்

நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி: மாநில ஆட்சியாளர், மந்திரி பெசாரிடம் கடும் அதிருப்தி

நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி: மாநில ஆட்சியாளர், மந்திரி பெசாரிடம் கடும் அதிருப்தி

மலாக்கா தேர்தல்: பிகேஆர் 9 தொகுதிகளில் போட்டி; 24ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பு

மலாக்கா தேர்தல்: பிகேஆர் 9 தொகுதிகளில் போட்டி; 24ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பு

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: அரசியலாக்க வேண்டாம் – ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: அரசியலாக்க வேண்டாம் – ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு

நெகிரி செம்பிலானின் 17ஆவது ஜெலுபு உண்டாங்-ஆக அஸ்ரின் கைரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நெகிரி செம்பிலானின் 17ஆவது ஜெலுபு உண்டாங்-ஆக அஸ்ரின் கைரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெரிக்காத்தான் நேஷனல் மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

பெரிக்காத்தான் நேஷனல் மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு