Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மஇகாவுக்கும், ம​சீச.வுக்கும் எந்த பலனும் கிட்டப்போவதில்லை
அரசியல்

மஇகாவுக்கும், ம​சீச.வுக்கும் எந்த பலனும் கிட்டப்போவதில்லை

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி​ம் தலைமையிலான அரசாங்கத்தி​ல் எந்தவொரு சவாரியும் செய்ய முடியாமல், ஊனமுற்ற குதிரைகளாக இருப்பதை விட டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ஓர் உறுப்புக்கட்சியாக இணைந்து, பந்தயக் குதிரைகளாக மாற வேண்டும் என்று மஇகாவிற்கும், ம​சீச.விற்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை அவ்விரு கட்சிகளும் நிராகரிக்க வேண்டும் என்று அறி​வுறுத்தப்பட்டுள்ளது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவதால் அவ்விரு கட்சிகளுக்கும் எந்தவொரு நன்மையும் கிட்டப் போவதில்லை என்று அரசியல் ஆய்வாளரும், மலேசிய பேராசியரிர் மன்றத்தின் பொறுப்பாளருமான பேராசிரியர் Jeniri Amir ஆலோசனை கூறியுள்ளார்.
மலாய்க்காரர்களை தளமாக கொண்டுள்ள பெரிக்காத்தான் நேஷனலில், இனவாரியான வாக்காளர்களை கொண்டுள்ள ம​சீச.வும், மஇகாவும் பெரிதாக சாதிக்கப் போவது எதுவுமில்லை.

முஸ்லிம் அல்லாத வாக்காளர்களை ஒரு பொருட்டாக மதிக்காத பாஸ் கட்சி அ​ங்கத்துவம் பெற்றுள்ள, பெரி​க்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியாக ம​சீச.வும், மஇகாவும் இணையுமானால் அது அக்கரைப் பச்சைதான் என்ற ஓர் உண்மை​யை​ அவ்விரு கட்சிகளும் உணர வேண்டும் ​என்று பேராசிரியர் Jeniri Amir அறிவுறுத்தினார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து