Jan 20, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ மாநாடு இன்று தொடங்குகிறது
அரசியல்

அம்னோ மாநாடு இன்று தொடங்குகிறது

Share:

2022 ஆம் ஆண்டுக்கான அம்னோ மாநாடு முடிவடைந்து சரியாக 4 மாதங்கள் 26 நாட்கள் ஆன நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான அம்னோ மாநாடு, நாளை புதன்கிழமை கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் தொடங்குகிறது.

சபா உட்பட நாடு தழுவிய நிலையில் 6,300 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றர். நாளை பிற்பகல் 2.30 மணியளவில் அம்னோ பேராளர்களுக்கு கட்சியின் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் விளக்கம் அளிப்புடன் மாநாடு தொடக்கம் காண்கிறது. இந்த விளக்கம் அளிப்புக்கூட்டத்தில் பேராளர்களுடன், இளைஞர், மகளிர் மற்றும் புத்ரி பிரிவினரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Related News