பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் வற்புறுத்தலின் பெயரில் நடக்கவில்லை என்று ஜசெக கருதுகிறது.
அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வ சிவக்குமார் கூறுகையில், அன்வாருக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் தானாக முன்வந்து ஆதரவு தெரிவிக்க யாருக்கும் உரிமை உண்டு எனக் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பில் வற்புறுத்தல் இருப்பதாகக் கூறும் தரப்பினர் இருக்கலாம், ஆனால் தாம் அறிந்த வரையிலும் ஊடகங்களில் இருந்தும் அவ்வாறான எந்தவித வற்புறுத்தலும் இல்லை என மனிதவள அமைச்சருமான சிவக்குமார் கூறினார்.
பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்தவித தவறும் இல்லை, இது கட்சித் தாவல் இல்லை என சிவக்குமார் விளக்கினார்.








