கோலாலம்பூர், ஆகஸ்ட்.10-
அம்னோவும் டிஏபியும் நெருங்கியதால், தேசிய முன்னணி ஒரு 'வெற்றுக்கூடு' ஆகி விட்டதகாவும், மசீச கூட்டணியை விட்டு வெளியேற இதுவே சரியான நேரம் என்றும் முன்னாள் மசீச துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ தி லியான் கேர் தெரிவித்துள்ளார்.
அம்னோ-டிஏபியின் இந்த நெருங்கிய உறவு மசீசவுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், அதன் அடித்தட்டுத் தொண்டர்களுக்கு ஏமாற்றமாகவும் இருப்பதாக அவர் சாடினார். மஇகா, மசீச ஆகிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற முடியும் என இந்த இரு கட்சிகளும் நினைப்பதாகவும் அவர் கூறினார். ஆகையால், அரசியல் கௌரவத்தை இழப்பதற்கு முன்பு மசீச ஒரு முடிவெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.