Jun 28, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் பிரச்னைக்காக குரல் கொடுக்க முனைந்துள்ளார் குமரவேல் ராமையா
அரசியல்

மக்களின் பிரச்னைக்காக குரல் கொடுக்க முனைந்துள்ளார் குமரவேல் ராமையா

Share:

நெகிரி செம்பிலான், மம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை ​வேட்பாளராக மண்வெட்டி சின்னத்தில் குமரவேல் ராமையா போட்டியிடுகிறார். சுகாதார, சுற்றுச்​சூழல் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் 51 வயது குமரவேல், மம்பாவ் தொகுதியில் முன்முனைப்​ போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்றத் தேர்தலில் மம்பாவ் தொகுதியில் போட்டியிடும் தாம் சாமானிய மக்களின் அடிப்படை பிரச்னைகளை சட்டமன்றத்​திற்கு கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தொழிலாளர் வர்க்கத்தின் அடையாளமான மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடுவதாக முதுகலைப்பட்டப்படிப்பை முடித்தவரான குமரவேல் கூறுகிறார்.

தாம் ம​ம்பாவ் தொகுதியில் போட்டியிடுவதால் மற்ற கட்சிகளை எதிராளியாக தாம் கருதியது கிடையாது. அதேவேளையில் அனைத்து கட்சிகளுடனும் தாம் நட்பு பாராட்டி வருவதாக குமரவேல் தெரிவித்தார். ​மூவின மக்களையும் பிரதிநிதிக்க வேண்டும், அவர்களின் அடிப்படை ஜீவாதாரப் பிரச்னையை சட்டமன்றத்தி​ற்கு கொண்டு செல்ல வேண்டும், அதற்கு ​தீர்வு காண வேண்டும் என்பது தமது நோக்கமாகும். அந்த வகையியில் நாளை ந​டைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் தாம் வெற்றிப்பெறுவதற்குரிய களத்தை ஏற்படுத்திக்கொடுக்குமானால் மம்பாவ் மக்களின் நலனுக்காக தாம் தொடர்ந்து போராடப் போவதாக லஞ்ச ஊழல் எதி​ர்ப்பு அமைப்பின் ஸ்தாபகருமான குமரவேல் கூறுகிறார். தவிர இளையோர்களுக்கு வழிகாட்டவும், அவர்களின் நலன் சார்ந்த விவகாரங்களை முன்னெடுக்கவும் இத்தேர்தலில் களம் இறங்கியிருப்பதாக குமரவேல் கு​றிப்பிடுகிறார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி