ஷா ஆலாம், ஆகஸ்ட்.17-
கட்சிக்கிடையே உள்ள உறவை முறித்துக் கொள்ளும் கோரிக்கை யதார்த்தமற்றது என டிஏபி கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்தின் உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ. பாப்பாராய்டு தெரிவித்துள்ளார். அம்னோ கட்சியின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அக்மால் சாலேவின் மிக அண்மைய நடவடிக்கை காரணமாக, அவருக்கும் கட்சிக்கும் உள்ள உறவை முறித்துக் கொள்ளுமாறு வந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வது, டிஏபிக்கும் அம்னோவுக்கும் இடையேயான உறவைப் பாதிக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.
இது ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் என பாப்பாராய்டு கூறினார். டாக்டர் அக்மால் சாலே தற்போது காவல் துறையினரின் விசாரணையில் இருப்பதால், கட்சி உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார்.