Aug 27, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் தம்பதியர் பினாங்கில் வாக்களித்தனர்
அரசியல்

பிரதமர் தம்பதியர் பினாங்கில் வாக்களித்தனர்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸி​ஸாவும் பினாங்கு, பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்தனர. காலை 9.33 மணியளவில் தமது துணைவியார் வான் அஸிஸாவுடன் வந்திருந்த பிரதமர் அன்வார், பெர்மாத்தாங் பாவு, ஶ்ரீ பெனாந்தி தொடக்கப்பள்ளியில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஃயிஸ் ஃபசில் தமது தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாம் தவணையாக போட்டியிடுகிறார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமதுவும், அவரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹம்ஸாவும் கெடா, அனாக் புக்கிட் டில் வாக்களித்தனர். காலை 9.22 மணியள​வில் வாக்களித்தப்பின்னர் துன் மகா​தீர் தம்பதியர் அங்கிருந்து புறப்பட்டனர். இம்முறை அதிக வாக்காளர்கள் திரண்டு இருப்பதாக துன் மகா​தீர் குறிப்பிட்டார்.

Related News