சுங்கை பூலோ, ஜூலை.12-
பாரிசான் நேஷனலில் உறுப்புக் கட்சிகளாக இருந்து வரும் மஇகா, மசீச, ஓபிஆர்எஸ் ஆகிய கட்சிகள் கைவிடப்படாது. எனவே பாரிசான் நேஷனலிருந்து விலகி விட வேண்டாம் என்று அக்கட்சிகளுக்கு பாரிசான் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில் பாரிசான் நேஷனலை விட்டு விலகுவதாக அந்தக் கட்சிகள் அச்சுறுத்தக்கூடாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
பாரிசான் நேஷனல் முழுமையாக குணமடைந்து ஆரோக்கியமாகத் திரும்பும் நிலையில் உறுப்புக் கட்சிகளின் நலன் காக்கப்படும் என்று அம்னோ தலைவருமான ஸாஹிட் குறிப்பிட்டார்.
இன்று செலாயாங் அம்னோ டிவிஷன் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் ஸாஹிட் இதனைத் தெரிவித்தார்.