Aug 27, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சித் தலைவராக அஸ்மின் அலி நியனமம்
அரசியல்

எதிர்க்கட்சித் தலைவராக அஸ்மின் அலி நியனமம்

Share:

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்மின் அலி நியமனத்தை சபா நாயகர் லௌ வெங் சான் அறிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் தொடங்கிய போது பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான அஸ்மின் அலி, எதிர்க்கட்சியினருக்கு தலைமையேற்பார் என்று லௌ வெங் சான் குறிப்பிட்டார்.

முன்னதாக சிலாங்கூர் மாநிலத்தின் 56 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் என்பதுடன் சத்தியப் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.

Related News