புத்ராஜெயா, ஜூலை.14-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நிகழ்வில் பண்டான் எம்.பி.யும், பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான ரஃபிஸி ரம்லி கலந்து கொள்ளவில்லை.
இதே போன்று செத்தியா வங்சா எம்.பி.யும், பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான நிக் நஸ்மியும் கலந்து கொள்ளவில்லை. இவ்விருவரும் கடந்த மே மாதம் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தோல்வி கண்டனர்.
இதனைத் தொடர்ந்து அவ்விருவரும் தத்தம் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து கடந்த மாதம் விலகினர்.