பினாங்கு துணை முதலமைச்சர் பதவி என்பது இந்திய சமுதாயத்திற்கும், சிறுபான்மையினருக்கும் மட்டும் சேவையாற்றக்கூடிய பதவி என்று பழைய துணை முதலமைச்சர் கொண்டிருந்த தோற்றத்தையும், பாணியையும் முற்றாக தாம் அகற்றப் போவதாக டிஏபி சார்பில் பினாங்கு மாநிலத்தின் புதிய துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜக்டீப் சிங் டியோ அறிவித்துள்ளார்.
பினாங்கு துணை முதலமைச்சர் பதவி என்பது மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் சேவையாற்றக்கூடிய பதவியே தவிர அது இந்திய சமுதாயத்திற்கும்,சிறுபான்மையினத்தவருக்கம் மட்டும் சேவையாற்றக்கூடிய பதவி என்ற பழைய பாணியை முற்றாக மாற்றிய அமைக்கப் போவதாக ஜக்டீப் சிங் டியோ குறிப்பிட்டுள்ளார்.
பினாங்கு மாநில அரசாங்கத்தில் இரண்டு தவணைக்காலம் ஆட்சிக்குழு உறுப்பினராக சேவையாற்றிய தமது அனுபவத்தை அடிப்படையாக கொண்டு துணை முதலமைச்சர் பதவிக்கு புத்துயிர் அளிக்கப் போவதாக ஜக்டீப் சிங் டியோ தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தை பக்காத்தான் ராக்யாட் ( Pakatan Rakyat ) கைப்பற்றியது முதல் இம்மாதம் 12 ஆம் தேதி வரையில் 15 ஆண்டு காலத்திற்கு பினாங்கு துணை முதலமைச்சராக பதவி வகித்தவர் டாக்டர் பி.இராமசாமி ஆவார். தற்போது, அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஜக்டீப் சிங் டியோ, மாநில துணை முதலமைச்சர் என்ற முறையில் இன்று தமது முதலாவது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பினாங்கு துணை முதலமைச்சர் பதவியை ஒரு தமிழர்தான் வகிக்க வேண்டும் என்ற வாதத்தையும் ஜக்டீப் சிங் டியோமுற்றாக நிராகரித்தார். டிஏபி யின் தீவிர ஆதரவாளரான தமது தந்தையார், மறைந்த கர்ப்பால் சிங், இந்திய சமுதாயத்தின் நலனுக்காக போராடியவராக இருந்தாலும் அவர், தமிழர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டவர் அல்ல என்பதையும் ஜக்டீப் சிங் டியோ தெளிவுபடுத்தினார்.
தாம் பஞ்சாபி சமூகத்தை சேர்ந்த ஓர் இந்தியர் என்ற போதிலும் இனமத வேறுபாடுயின்றி அனைத்து மக்களின் விவகாரங்களிலும் தாம் கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு இருப்பதாக ஜக்டீப் சிங் டியோ விளக்கியுள்ளார்.

அரசியல்
பினாங்கு துணை முதலமைச்சர் பதவி இந்திய சமுதாயத்தற்கு மட்டும் சேவையாற்றக்கூடிய பதவியா? ஒரு தமிழர்தான் அந்தப் பதவியை வகிக்க வேண்டுமா?
Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


