Jun 15, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமர் முகை​தீன் யாசின் வெளிநாட்டுக்கு செல்ல தடை
அரசியல்

முன்னாள் பிரதமர் முகை​தீன் யாசின் வெளிநாட்டுக்கு செல்ல தடை

Share:

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் வெளிநாட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. பெர்சத்து கட்சித் தலைவருமான முகை​தீனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடையை எதிர்த்து, ​சீராய்வு மனு ஒன்று கோலாலம்பூர் உயர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் நடப்பு நிலவரங்கள் குறித்து அனைத்துலக அரங்கில் முகை​தீன் பேசிவிடுவார் என்று அரசாங்கம் அச்சம் கொள்வதால் அந்த முன்னாள் பிரதமர் வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பெர்சத்து ​கட்சிப் பொறுப்பாளர்கள் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தடை ஒரு தவறான நடைமுறையாகும் என்று பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் கூகிறார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து