Dec 8, 2025
Thisaigal NewsYouTube
அன்வாரின் அரசாங்கத்தால் இதுவரை ஒரு பலனும் இல்லை
அரசியல்

அன்வாரின் அரசாங்கத்தால் இதுவரை ஒரு பலனும் இல்லை

Share:

பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்ற முதல் 100 நாட்களில் ‘எதுவும் மாறவில்லை’ என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது வர்ணித்துள்ளார்.
அன்வார் பிரதமராக இருந்த முதல் 100 நாட்கள் எந்த பலனையும் தரவில்லை என்று நேற்று பு த்ரா ஜெயாவில் உள்ள பெர்டானா அறவாரியத்தில் நிகழ்ந்த செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் மகா​தீர் மேற்கண்டவாறு கூறினார்.


வெறும் ஆதரவைப் பெறுவதற்காக அன்வார் வாக்குறுதிகளை அளித்து தெளித்து வருகிறார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது பற்றி தினமும் அறிக்கைகளை வெளியிடுவதில்தான் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். ஆனால் எதுவும் மாறவில்லை.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மற்றும் மலாய்க்காரர்களைப் பாதிக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பது குறித்து அன்வார் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகிறார் என்று டாக்டர் மகா​தீர் குற்ற​ஞ்சாட்டினார்.

Related News