Jan 13, 2026
Thisaigal NewsYouTube
“பெர்சத்துவுடன் கைகோர்க்குமா அம்னோ? ஸாஹிட் ஹமிடியின் அதிரடி சமிக்ஞையும்..... பரபரக்கும் அரசியலும்!" நாளை தொடங்குகிறது அம்னோ மாநாடு
அரசியல்

“பெர்சத்துவுடன் கைகோர்க்குமா அம்னோ? ஸாஹிட் ஹமிடியின் அதிரடி சமிக்ஞையும்..... பரபரக்கும் அரசியலும்!" நாளை தொடங்குகிறது அம்னோ மாநாடு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.13-

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நாளை புதன்கிழமை அம்னோ பொதுப்பேரவை தொடங்குகிறது. அம்னோவின் இந்த ஆண்டு பொதுப்பேரவை, மலேசிய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

வரும் 16-ஆவது பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வியூகங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, நம்பிக்கைக் கூட்டணி தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கமாக உள்ள அம்னோ, மற்ற கட்சிகளுடனான எதிர்காலத் தொகுதிப் பங்கீடு மற்றும் அரசியல் ஒத்துழைப்பு குறித்துத் தனது உறுதியான நிலைப்பாட்டை இந்தப் பேரவையின் வாயிலாக வெளிப்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, இன்றைய மாறி வரும் அரசியல் சூழலில் 'மடானி' அரசாங்கத்தில் அம்னோவின் பங்களிப்பை நிலைநிறுத்துவது குறித்தும், மலாய்-முஸ்லிம் நலன்களைப் பாதுகாப்பதில் கட்சியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியும் உரையாற்ற உள்ளார்.

மேலும், பெர்சத்து உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசியல் சாத்தியக்கூறுகள் மற்றும் கட்சியின் உட்புற வலுவூட்டல் நடவடிக்கைகள் குறித்தும் பிரதிநிதிகளிடையே விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தப் பொதுப்பேரவையின் முடிவுகள், 2026-ஆம் ஆண்டின் நாட்டின் அரசியல் திசையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News