மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் மனித உரிமைப் போராட்டவாதியுமான டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசன், தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் பெர்சிஹ் அமைப்பின் முன்னாள் தலைவரான அம்பிகா, சட்டத்துறையில் நிபுணத்துவ ஆற்றலை கொண்டுள்ளவர். நாட்டின் தேர்தல் முறை குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பவர். சட்டத்துறை தொடர்பான பரிந்துரை குழுவிலும் இடம் பெற்று, பரந்த அனுபவத்தை கொண்டுள்ளார். அவர் நாட்டின் தேர்தல் ஆணையத் தலைவராக பொறுப்பேற்பதற்கு அனைத்து தகுதிகளும் உண்டு என்று கோத்தா மலாக்கா எம்.பி. கோ பொய் தியோங் பரிந்துரை செய்துள்ளார்.
தற்போது தேர்தல் ஆணையத்தின் தலைவராக பொறுப்பில் இருக்கும் தான் ஶ்ரீ அப்துல் கானி அடுத்த ஆண்டு மே மாதம் பணி ஓய்வுபெறவிருப்பதால் காலியாகவிருக்கும் அப்பதவிக்கு அம்பிகா ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று கோ பொய் தியோங் கேட்டுக்கொண்டார்.








