புத்ராஜெயா, ஆகஸ்ட்.15-
தாம் தோற்றுவித்த மூடா கட்சிக்கு மீண்டும் தலைமையேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை மூவார் எம்.பி. சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் தற்போதைக்கு நிராகரித்துள்ளார்.
இது குறித்து முடிவெடுக்கத் தமக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2023 ஆம் ஆண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சையிட் சாடிக், தற்காலிகமாக மூடா தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
எனினும் கடந்த ஜுன் மாதம் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் சையிட் சாடிக்கிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்தது.
தற்போது குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடத் தாம் விரும்புவதாக சையிட் சாடிக் குறிப்பிட்டார்.