கோலாலம்பூர், செப்டம்பர்.01-
நகர்ப்புறப் புதுப்பித்தல் சட்டம் தொடர்பாக பொம்மலாட்ட அரசியல் வேண்டாம் என்று எதிர்க்கட்சியினருக்கு வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சட்டத்தை எதிர்க்க மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் உறுதி அளித்து இருந்ததை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
ஆனால், இது தொடர்ந்து பொம்மலாட்ட அரசியலாக நடத்தப்பட்டு வருகிறது என்று ங்கா கோர் மிங் தெரிவித்தார்.