பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒன்பது மாத கால ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பற்கு இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பாரிசான் நேஷனலை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகப் போவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பதவி விலகுவது மூலம் அந்த 7 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது மூலம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என்று ஆருடம் கூறப்பட்டு வருகிறது.
எனினும் பாரிசான் நேஷனலை சேர்ந்த 7 எம்.பி.க்கள் பதவி விலகப் போவதாக கூறப்படுவதை அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மறுத்துள்ளார். அப்படி ஏதும் தாம் கேள்விப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் இவ்வாறு கூறப்படுவது வெறும் வதந்தியாகும் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார். பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அக்கு ஜன்ஜி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுட்ளனர்.
அந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறினால் என்ன நடக்கும் என்பதை அவர்களுக்கு நன்றாக தெரியும். எனவே அந்த ஒப்பந்தத்தை மீறும் சாத்தியம் இல்லை என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

அரசியல்
பிரதமர் அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகிறார்களா?
Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!


