பெட்டாலிங் ஜெயா, மே.19-
இவ்வாரத்தில் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் இளைஞர், மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைக்கப் போவதில்லை என்று கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி அனுப்பி வைத்த பிரத்தியேகக் கடிதத்தின் உள்ளடக்கம், கசிந்து விட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைக் கட்சியின் பொதுச் செயலாளர் புஃஸியா சால்லே மறுத்துள்ளார்.
ரஃபிஸியின் கடிதம் தமக்கும், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் மட்டும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று புஃஸியா சால்லே வாதிட்டார்.
இரு தலைவர்களுக்குத் தாம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் உள்ளடக்கம் கசிந்து விட்டதாகக் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடும் ரஃபிஸி ரம்லி நேற்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.