சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு சடங்கு வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு சடங்கிற்கு , மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ,சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அனுமதி அளித்துள்ளார்.
இந்த பதவியேற்பு சடங்கு , நாளை சனிக்கிழமை நடைப்பெறவிருந்த வேளையில் இச்சடங்கு திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 36 இடங்களை பக்காத்தான் ஹரப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்றிய வேளையில் பெரிக்காதான் நேஷனல் கூட்டணி 22 இடங்களை கைப்பற்றியுள்ளது.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


