Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பாஸ் கட்சியின் அரசியல் வெறுப்புணர்வு, மிக ஆபத்தானது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாஸ் கட்சியின் அரசியல் வெறுப்புணர்வு, மிக ஆபத்தானது

கோலாலம்பூர், ஜூன்.25-

பாஸ் கட்சியின் அரசியல் வெறுப்புணர்வு மிக ஆபத்தான செயலாகும் என்று ஜசெக ஆலோசகர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மருமுகன், நேற்று இனவாதத் தன்மையில் வெளியிட்ட அறிக்கையானது, அந்தக் கட்சி, இனவாதத்தை முன்னெடுத்து அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறது. இது மிகப் பெரிய ஆபத்தை உண்டு பண்ணும் என்று ஜசெக முன்னாள் தலைவரான லிம் குவாங் எச்சரித்தார்.

மலேசிய ஆயுதப்படையில் மலாய்க்கார அல்லாத ஒருவர் உயர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டது தொடர்பில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மருமகனும், பாஸ் கட்சியின் சுங்கை பூலோ தொகுதி தலைவருமான ஸாஹாருடின் முகமட் வெளியிட்ட அறிக்கை மிக ஆபத்தானது என்பதுடன் அவர் மீது சட்டம் பாய வேண்டும் என்று லிம் வலியுறுத்தினார்.

மலேசிய ஆயுதப் படையில் சீனர் ஒருவருக்கு முக்கியப் பதவி வழங்கப்பட்டு இருப்பது மூலம் அடுத்த 50 ஆண்டுகளில் சீனர் ஒருவர் நாட்டின் பிரதமராக வரலாம் என்று இனத்துவேஷ அடிப்படையில் ஸாஹாருடின் முகமட் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →