Dec 1, 2025
Thisaigal NewsYouTube
போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன
அரசியல்

போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன

Share:

கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சித் தலைவர் Abdul Hadi Awang வெற்றி பெற்ற marang நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போல் வெளியான காணொளி தொடர்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான சில ஆதாரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM பெற்றுள்ளது.


இது தொடர்பாக சில சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், விசாரணை அறிக்கை விரைவில் அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் SPRM வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஸ் கட்சியின் தலைவர் ஒருவர், வாக்காளர்களிடம் பாஸ் கட்சிக்கு வாக்களிக்கும் படி சத்தியம் வாங்கியப் பின்னர், தலா 50 வெள்ளி வழங்கப்படும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

Related News