கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதின் யாசின் தலைமையில் உருவாக்கம் கண்டுள்ள புதிய கூட்டணியில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் இணையாது என்று அதன் தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயகுமார் தேவராஜ் தெரிவித்துள்ளர்.
பெர்சத்துவின் தலைவரான முகைதீன் அறிவித்த அந்தக் கூட்டணியில் இன விவகாரங்களைத் தூண்டிக் கொண்டு இருக்கும் பல கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அந்தக் கூட்டணியில் இணைய பிஎஸ்எம் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று ஜெயகுமார் குறிப்பிட்டார்.
நேற்று முகைதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிஎஸ்எம் கட்சி சார்பில் அதன் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வம் கலந்து கொண்ட போதும், இன அடிப்படையிலான அந்தக் கூட்டணியில் இணைவதற்கு பிஎஸ்எம் உத்தேசிக்கவில்லை என்று ஜெயகுமார் இன்று விளக்கினார்.