சீனர்கள் மற்றும் இந்தியர்களின் பெருவாரியான ஆதரவை கொண்டுள்ளதாக கூறப்படும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பிகேஆர் கட்சி, அண்மையில் அமைக்கப்பட்ட மாநிலங்களுக்கான ஆட்சிக்குழுவில் தனது கட்சி சார்பில் மலாய்க்காரர் அல்லாத ஒருவரைகூட ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பபட்டுள்ளது.
பினாங்கு,சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் பிகேஆர், தனது கட்சி சார்பில் மலாய்க்காரர் அல்லாத ஒருவரைகூட நியமிக்காதது மற்றும் இன்னும் அமைக்கப்படாமல் இருக்கும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் மலாய்க்காரர் அல்லாத ஒருவரைகூட இன்னும் பரிந்துரைக்காதது, பிகேஆர் பல்லின மக்களை கொண்ட கட்சி என்ற உணர்வை அறவே பிரதிபலிக்கவில்லை என்று பிகேஆர் கட்சியின் மலாக்கா மாநில பொருளாளர் கியூ டெக் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில ஆட்சியை முதல் முறையாக பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றியது. சீனர் மற்றும் இந்தியர்களுக்கு ஆட்சிக்குழுவில் வாய்ப்பு வழங்கி வந்த பிகேஆர், நேற்று அமைக்கப்பட்ட ஆட்சிக்குழுவில் தனது கட்சி சார்பில் இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு அறவே வாய்ப்பு வழங்கவில்லை என்று கியூ டெக் சுட்டிக்காட்டினார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் பிகேஆர் சார்பில் சீனர்கள் இந்தியர்கள் இல்லாதது, அக்கட்சி இதுநாள் வரையில் கட்டி காத்து வந்த பல்லின உணர்வை முற்றிலும் புறந்தள்ளிவிட்டதாக கியூ டெக் குற்றஞ்சாட்டினார். இதன் தொடர்பில் பிகேஆர் உண்மையிலேயே ஒரு பல்லின கட்சியா? என்பது குறித்து கட்சியின் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அரசியல்
பிகேஆர் சார்பில் மலாய்க்காரர் அல்லாத ஒருவரைக்கூட ஆட்சிக்குழுவில் நியமிக்கப்படாதது ஏன்?
Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


