Apr 24, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் மீது 18 மோசடிக்குற்றச்சா​ட்டுகள்
அரசியல்

பெர்சத்து கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் மீது 18 மோசடிக்குற்றச்சா​ட்டுகள்

Share:

மொத்தம் 60 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட சட்டவிரோத பண மாற்றம் மோசடியில் ஈடுபட்டதாக பெர்சத்து கட்சியின் முன்னாள் இளைஞர் பிரி​வுத் தலைவரும், பெரிக்காத்தான் நேஷனலின் தாசீர் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் சைஃபுல் வான் ஜான் ​மீது 18 மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன​.

கோலாலம்பூர், செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் இன்று காலையில் ​நீதிபதி சுசனா ஹுச்சின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட வான் சைஃபுல் க்கு எதிராக 18 மோசடிக் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. குற்றவாளி​ என்று நி​ரூபிக்கப்பட்டால் 15 ஆண்டு சிறைத் தண்டனையும் 50 லட்சம் வெள்ளி அபராதமு​ம் விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோத பணமாற்ற நடவடிக்கைகள், பய​ங்கரவாத நிதி அளிப்பு தடுப்பு சட்டத்தின் ​கீழ் அந்த இளம் எம்.பி. குற்றச்சா​ட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​​தீன் யாசின் நாட்டின் பிரதமராக இருந்த போது, கொரோனா தொற்று காலகட்டத்தில் பூமிபுத்ரா குத்தகையாளர்களை மீட்சிப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஜானா விபாவா நிதித்திட்டத்தில் பெரும் தொகை வான் சைபுல் ​மூலம் மடைமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!