கோலாலம்பூர், ஜனவரி.13-
அம்னோ மற்றும் பெர்சாத்து ஆகிய கட்சிகளுக்கு இடையே எதிர்காலத்தில் அரசியல் ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று நிராகரிக்கவில்லை.
அரசியலில் எதுவும் நிலையானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள ஸாஹிட் ஹமிடி, எதிர்கால அரசியல் சூழலுக்கு ஏற்ப பெர்சாத்து கட்சியுடன் மீண்டும் இணைந்து செயல்படும் சாத்தியத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை. "அரசியலில் சாத்தியமற்றது என்று எதுவுமே இல்லை" என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எந்தவோர் அரசியல் கூட்டணியும் அல்லது ஒத்துழைப்பும் அம்னோவின் உச்சமன்றம் மற்றும் பொதுப்பேரவையின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.








