ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன் உட்பட நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர் இன்று பதவியேற்றனர்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று 12 நாட்களுக்கு பிறகு இன்று வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் குவாலா பிலா, இஸ்தானா பெசார் செரி மெனந்தி, பாலைருங் செரி அரண்மனையில் மாநில சமஸ்தானபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டதுடன் ரகசிய காப்புப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இந்த பத்து பேரில் அறுவர் புதிய முகங்கள் ஆவர்.
பக்காத்தான் ஹராப்பானில் டிஏபி சார்பில் 4 பேருக்கும் , பிகேஆர் சார்பில் 2 பேருக்கும் அமானாவிற்கு சட்டமன்ற சபா நாயர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் பாரிசான் நேஷனல் சார்பில் 4 பேருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி வழக்கப்பட்டுள்ளது.
வீரப்பன், அருள்குமார் உட்பட டிஏபி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள நான்கு ஆட்சிக்குழு உறுப்பினர்களும் ஏற்கனவே அப்பொறுப்புகளில் இருந்தவர்கள் ஆவர்.
டிஏபி சார்பில் ரெப்பா சட்டமன்றத் தொகுதியை 4 ஆவது முறையாக தற்காத்துக்கொண்ட எஸ். வீரப்பனுக்கு முக்கிய துறைகளில் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
டிஏபி யின் இதர சட்டமன்ற உறுப்பினர்களான நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள்குமார் , புக்கிட் கெபாயாங் சட்டமன்ற உறுப்பினர் நிக்கோல் டான், பஹாவ் சட்டமன்ற உறுப்பினர் தியோ லோல் சியோங் ஆகியோரும் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அரசியல்
ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் உட்பட நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர் பதவியேற்றனர்
Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


