மாராங் நாடாளுமன்ற உறுப்பினராக தான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் தொடர்ந்து நிலைக்கிறார் என கூட்டரசு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
மூவர் கொண்ட நீதிபதி குழுவினரின் ஒருமித்த முடிவாக இந்தத் தீர்ப்பு அமைகிறது.
கடந்த 15வது பொதுத் தேர்தலின்போது, அத்தொகுதியில் போட்டியிட்ட பாஸ் கட்சித் தலைவருமான தான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் அத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததாக தேசிய முன்னணியின் முன்னாள் வேட்பாளர் ஜஸ்மீரா ஓத்மான், குற்றஞ்சாட்டி வழக்கு தொடுத்திருந்தார்.
சரியான ஆதாரங்களை ஜஸ்மீரா முன்வைக்காததால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு தான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் தொடர்ந்து மாராங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கிறார் என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளிட்த்துள்ளது.








