கோலாலம்பூர், செப்டம்பர்.05-
வரும் பொதுத் தேர்தலில் ஒத்துழைப்பது குறித்து மஇகா மற்றும் மசீச.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஆக்ககரமான விளைவுகளைத் தந்துள்ளதாக டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
டான் ஶ்ரீ முகைதீன் யாசின், நாட்டின் பிரதமராக இருந்த போது, அவரின் தலைமையிலான அரசாங்கத்தில் மஇகா, மசீச. ஆகியோர் இடம் பெற்று இருந்தன. அவர்கள் எங்களின் பழைய நண்பர்கள் ஆவார். எனவே அவர்களுடன் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நல்ல பலனைத் தந்துள்ளதாக அஸ்மின் அலி தெரிவித்தார்.