Oct 11, 2026
Thisaigal NewsYouTube

கட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை

கப்பாளா பாத்தாஸ், மே.16-

பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில், தொகுதியில் வெற்றிப் பெற்றவர்கள், கட்சியின் தேசிய மாநாடு மற்றும் தேர்தல் நடைபெறும் இவ்வேளையில் பதவி விலகப் போவதாக மிரட்டும் தோரணையில் செயல்படுவார்களேயானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ பாஃமி பாஃட்சீல் எச்சத்துள்ளார்.

பிகேஆர் தலைமைத்துவத்தை அச்சுறுத்தும் தோரணையில் செயல்படும் சம்பந்தப்பட்ட தலைவர்களின் பதவி விலகலினால் தொகுதித் தேர்தல் மீண்டும் நடத்தப்படும் நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதிலிருந்து கறுப்புப் பட்டியல்க்ல் சேர்க்கப்படுவர் என்று தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ பாஃமி எச்சரிக்கை விடுத்தார்.

தங்கள் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைப் பிடிக்கவில்லை என்றும், அவர்கள் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தொகுதியில் வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்கள் சிலர், பதவி விலகப் போவதாக மிரட்டி வருகின்றனர் என்று பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் புஃஸியா சால்லே தம்மிடம் தெரியப்படுத்தியுள்ளதாக டத்தோ பாஃமி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →