Dec 8, 2025
Thisaigal NewsYouTube
வரி ஏய்ப்பு செய்கின்றவர்களுக்கு எதிராக விசாரணை
அரசியல்

வரி ஏய்ப்பு செய்கின்றவர்களுக்கு எதிராக விசாரணை

Share:

வரி ஏய்ப்பு செய்கின்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தும்படி உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார். வரி விதிப்புக்கு ஆளாகும் ஒவ்வொரு நபரும், நிறுவனமும் வரி செலுத்துவது கட்டாயமாகும்.


வரி ஏய்ப்பவர்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே இத்தகைய கடுமையான ஓர் உத்தரவை வருமான வரி வாரியத்திற்கு தா​ம் பிறப்பித்துள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.


நேற்றிரவு சைபர்​ஜெயாவில் 27 ஆவது வருமான வரி தினத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News