Jan 20, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் மகாதீரின் துன் விருது பறிக்கப்பட வேண்டும்
அரசியல்

டாக்டர் மகாதீரின் துன் விருது பறிக்கப்பட வேண்டும்

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு வழங்கப்பட்ட துன் விருது பறிக்கப்பட வேண்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர் , இன்று நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

தாம் தொடங்கியுள்ள மலாய்க்காரர்கள் பிரகடனம் வாயிலாக ஆட்சியாளர்களுக்கு எதிராக துன் மகாதீர் அவமதிப்பை ஏற்படுத்தியிருபப்துடன் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்ற காரணத்தினால் டாக்டர் மகாதீரின் துன் விருது பறிக்கப்பட வேண்டும் என்று ராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஆட்சியாளர்கள் அவமதிக்கப்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இஸ்தானா நெகாராவில் அறிவுறுத்தியிருப்பதைப் போல துன் மகாதீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரச மலேசிய போலீஸ் படை தயக்கம் காட்டக்கூடாது” என்று ராயர் வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் மகாதீர் அண்மைய காலமாக மலேசியர்களை பிளவுப்படுத்தும் வகையில் சினமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருவது நாட்டின் பொது அமைதிக்கு மிகப்பெரிய மிரட்டலாகும் என்று ராயர் விளக்கினார்.

Related News