Aug 27, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

மிரட்டலினால் புத்ராஜெயா அஞ்சியது கிடையாது

Share:

பாலஸ்​தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலின் ராணுவ அடக்குமுறையை கடுமையாக விமர்சனம் செய்த காரணத்திற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு விடுக்கப்பட்டள்ள மிரட்டலினால் புத்ராஜெயா ஒரு போதும் அஞ்சியது கிடையாது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரே​லின் அடக்குமுறையை எதிர்த்து மலேசியா தொடர்ந்து துணிந்து குரல் கொடுக்கும் என்றும் பாலஸ்​தீனியர்களை பாதுகாப்பதே மலேசியாவின் நிலைப்பாடாகும் என்றும் பிரதமர் அன்வார் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்ற நாடுகுளில் உள்ள பல தரப்பினர் பிரதமர் அன்வாரை கடுமையாக சாடியும், மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டலினால் மலேசியா ஒரு போதும் பின்வாங்கி விடாது. பாலஸ்தினியர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று ஸ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காடிர் குறிப்பிட்டார்.

Related News