ஷா ஆலாம், ஜூலை.21-
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் புதல்வர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தலைமையில் நடைபெற்ற பெஜுவாங் கட்சி மாநாட்டில் மஇகாவின் இரண்டு முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டது மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஷா ஆலாம், ஐடிசிசி மாநாட்டு மையத்தில் துன் மகாதீர் வருகையுடன் அமைந்த பெஜுவாங் மாநாட்டில் மஇகாவின் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ். ஆனந்தன், மஇகா நிர்வாகச் செயலாளர் டத்தோ எ.டி ராஜா கலந்து கொண்டதாக மலேசியா காஸெட் அகப்பக்கச் செய்தி கூறுகிறது.

அரசாங்கத்தில் ஓர் அங்கமாக விளங்கும் மஇகாவின் முக்கியத் தலைவர்கள், எதிர்க்கட்சியான பெஜுவான் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு இருப்பது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.
பெஜுவான்வ் மாநாட்டில் மஇகாவின் இரு முக்கியத் தலைவர்களுடன் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான், எஐபிபி தலைவர் பி. புனிதன், மலேசிய இந்திய முன்னேற்றக் கட்சியின் தலைவர் பி. வேதமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.