இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ள சிம்பாங் ஜெராம் மற்றும் புலாய் மக்கள் எதிர்கட்சிகளுக்கு வாக்களிப்பதால் எந்தவொரு நன்மையும் இல்லை என அம்னோ கட்சியின் செயலாக்க உச்சமன்ற உறுப்பினர் அஹ்மாட் மஸ்லான் கூறி உள்ளார்.
வருகின்ற இடைத்தேர்தலில், வாக்காளர்கள் நடப்பு அரசாஙக்த்தில் உள்ள கட்சிகளுக்கு வாக்களிப்பதே சிறந்த வழி என்றும் நாட்டின் வளர்ச்சியினூடே அவர்கள் வாழும் தொகுதிகளும் வளர்ச்சி அடையும் என அவர் கூறினார்.
வாக்காளார்கள் நடப்பு அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலன் அத்தொகுதிகளில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு விரைவான தீர் காண வழியாக அமையும் என்பதால் வருகின்ற இடைத்தேர்தலில் மக்கள் நடப்பு அரசாங்கத்திர்கு வாக்களிப்பர் என அவர் நம்புவதாக கூறினார்.








