வரும் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறவிருக்கும் திரெங்கானு, கெமாமான் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும்படி மலாய் அமைப்புகளிடமிருந்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நிறைய அழைப்புகளை பெற்று வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அனைத்து அழைப்புகளையும் துன் மகாதீர் நிராகரித்து விட்டதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் கெமாமான் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் கட்சி பெற்ற வெற்றியை தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. தாம் 98 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்துள்ள வேளையில் தேர்தலில் போட்டியிடும் நாட்டம் குறைந்து விட்டதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.








