Oct 27, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மந்திரி பெசராக அமிருடின் ஷாரி இரண்டாவது தவணையாக நியமனம்
அரசியல்

சிலாங்கூர் மந்திரி பெசராக அமிருடின் ஷாரி இரண்டாவது தவணையாக நியமனம்

Share:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக டத்தோ செரி அமிருடின் ஷாரி இரண்டாவது தவணையாக பதவியேற்றுள்ளார். சிலாங்கூர் மாநிலத்திற்கு தொடர்ந்து தலைமையேற்பதற்கு ஏதுவாக அமிருடின் இன்று காலை 11.25 மணியள​வில் கிள்ளான், இஸ்தானா அலாம் ஷாவில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபிடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.இந்த பதவியேற்பு சடங்கில் சிலாங்கூர் அரசியார் தென்கு பெர்மைசூரி நோரஷிகின் மற்றும் ராஜா மூடா சிலாங்கூர்,தெங்கு அமிர் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 56 தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி 34 இடங்களை வென்ற வேளையில் பெரிக்காத்தான் நேஷனல் 22 இடங்களை வென்றது. சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவரான 43 வயது அமிருடின் ஷாரி, சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்​தில் வெற்றி பெற்றார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்