தீபாவளியைக் கொண்டாடும் வகையில், லெ மெரிடியன் புத்ராஜெயா தங்கும் விடுதியில், கடந்த அக்டோபர் 30 முதல் வரும் நவம்பர் 15-ஆம் தேதி வரை ‘சுவைகளின் திருவிழா’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, லேட்டஸ் ரெசிபி உணவகத்தில் இந்திய பாரம்பரிய உணவு வகைகள், பிரியாணி, தோசை, பட்டர் சிக்கன் மற்றும் பல்வேறு இனிப்பு வகைகளுடன் சிறப்பு உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விருந்தில், மதிய உணவு விருந்தானது, பெரியவர்களுக்கு 168 ரிங்கிட்டும், குழந்தைகளுக்கு 84 ரிங்கிட்டும், இரவு உணவு பெரியவர்களுக்கு 198 ரிங்கிடும், குழந்தைகளுக்கு 99 ரிங்கிட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், அகல் விளக்கேற்றுதல், கோலமிடுதல் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுவதாக லெ மெரிடியன் Le Méridien தங்கும் விடுதி நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்பதிவின் அடிப்படையில் இந்த விருந்தில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








