Nov 7, 2026
Thisaigal NewsYouTube

ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

பூச்சோங்கில் செயல்பட்டு வந்த ஒரு கோழி இறைச்சி விநியோக நிறுவனத்தில் ஹலால் நடைமுறைகள் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையை பெர்மிம் (மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை) வரவேற்றுள்ளது.

பொது மக்களின் நம்பிக்கையையும் நாட்டின் ஹலால் சான்றிதழ் அமைப்பின் மதிப்பையும் பாதுகாக்கும் நோக்கில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுத்த மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்), சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜாய்ஸ்) மற்றும் அது தொடர்புடைய அமலாக்க அதிகாரிகளுக்கு பெர்மிம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டது.

அதேவேளையில், ஹலால் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் மீறுவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பெர்மிம் வலியுறுத்தியது. இத்தகைய குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் மற்றவர்களுக்கு பாடமாகவும் எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும் என அது தெரிவித்தது.

மலேசியா இன்று உலக அரங்கில் ஹலால் துறையின் முன்னணி நாடாக விளங்குகிறது. மலேசிய ஹலால் சான்றிதழ் உலகளாவிய அளவில் உயர்ந்த நம்பகத்தன்மையையும் மரியாதையையும் பெற்றுள்ளது. இதனை பாதிக்கும் எந்தவொரு அலட்சியமோ அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட விதிமுறை மீறலோ நாட்டின் நற்பெயருக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்நிலையில், இது குறித்து பெர்மிம் தேசியத் தலைவர் முகம்மது அஸ்மான் ஷா கூறுகையில், "ஹலால் சான்றிதழ் என்பது ஒரு வணிக அனுமதி மட்டுமல்ல. அது முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையோடும் இஸ்லாமிய மதிப்புகளோடும் தொடர்புடைய ஒரு புனிதமான பொறுப்பாகும். ஹலால் நடைமுறைகளை மீறுவோர் மீது எவ்வித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளே மற்ற தொழில்துறையினருக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக அமையும்."

மேலும், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால் மலேசியாவின் இஸ்லாமிய அடையாளத்திற்கும் உலகளாவிய ஹலால் மையம் என்ற அந்தஸ்திற்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், ஹலால் சான்றிதழ் மீதான உள்ளூர் மற்றும் சர்வதேச நுகர்வோரின் நம்பிக்கையும் குறையக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, ஹலால் வழங்கல் சங்கிலியில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், அரசாங்கமும் அமலாக்க அமைப்புகளும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெர்மிம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

2027 புதிய கல்வித் திட்ட சர்ச்சை: கல்வித் துணை அமைச்சருடன் அவசரச் சிறப்புக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

2027 புதிய கல்வித் திட்ட சர்ச்சை: கல்வித் துணை அமைச்சருடன் அவசரச் சிறப்புக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

தீபாவளி திருநாளிலும் ஓய்வில்லா அழகுக் கலை நிபுணர்கள்: குடும்பத்தையும் தியாகம் செய்து வாடிக்கையாளர்களுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பு

தீபாவளி திருநாளிலும் ஓய்வில்லா அழகுக் கலை நிபுணர்கள்: குடும்பத்தையும் தியாகம் செய்து வாடிக்கையாளர்களுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பு

அம்மாவின் அன்பை மதியுங்கள்; தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்புங்கள்!” – அன்வார் உருக்கமான வேண்டுகோள்

அம்மாவின் அன்பை மதியுங்கள்; தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்புங்கள்!” – அன்வார் உருக்கமான வேண்டுகோள்

தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்! - டத்தோ ஶ்ரீ ரமணன் வாழ்த்து

தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்! - டத்தோ ஶ்ரீ ரமணன் வாழ்த்து

இலக்கவியல் அமைச்சரின் தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தி 2026 

இலக்கவியல் அமைச்சரின் தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தி 2026