Nov 7, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி திருநாளிலும் ஓய்வில்லா அழகுக் கலை நிபுணர்கள்: குடும்பத்தையும் தியாகம் செய்து வாடிக்கையாளர்களுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி திருநாளிலும் ஓய்வில்லா அழகுக் கலை நிபுணர்கள்: குடும்பத்தையும் தியாகம் செய்து வாடிக்கையாளர்களுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பு

தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரங்கள், குடும்ப ஒன்று கூடல் மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தப் பண்டிகைக் காலத்தில் அழகு நிலைய உரிமையாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மட்டும் ஓய்வில்லாத பரபரப்பான பணி நாட்களாகவே அமைகின்றன.

தீபாவளியை முன்னிட்டு பெண்கள் வீடு சுத்தம் செய்தல், ஷாப்பிங் செல்வது, பலகாரங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். அந்தப் பணிகளை முடித்த பின்னர், தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்காக பலர் கடைசி நேரத்தில் அழகு நிலையங்களை நாடுகின்றனர்.

இதனால், தீபாவளிக்கு முந்தைய நாட்களில் அழகு நிலையங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதாக, கூலிம் தாமான் பேராவில் இயங்கி வரும் அர்ஷவி அழகு நிலையத்தின் உரிமையாளர் தமிழ்செல்வி பக்தன் தெரிவித்தார்.

மேலும், பிற தொழில்களில் இருப்பவர்கள் தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே விடுமுறை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட முடியும். ஆனால், அழகுக் கலை நிபுணர்களுக்கு பண்டிகைக்கு முந்தைய நாட்களிலோ அல்லது தீபாவளி நாளிலோ விடுமுறை எடுப்பதற்கான வாய்ப்பு பெரும்பாலும் கிடைப்பதில்லை என்றும் தமிழ்செல்வி பக்தன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய பண்டிகை நேரத்திலும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு முன்னுரிமை அளித்து நள்ளிரவு வரை பணியாற்றும் அழகுக் கலை நிபுணர்களின் அர்ப்பணிப்பு, தீபாவளிக் கொண்டாட்டத்தின் மறுபக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

தங்களது தனிப்பட்ட நேரம், குடும்பப் பணிகள் மற்றும் ஓய்வு ஆகியவற்றைக்கூட தியாகம் செய்து, வாடிக்கையாளர்களின் அழகுத் தேவைகளை நிறைவேற்றும் அழகுக் கலை நிபுணர்களின் பணி பாராட்டுக்குரியது.

அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →