Nov 5, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி நல்வாழ்த்துகளுடன் திசைகளுக்கு கேடிஎம்பி உயர் அதிகாரிகள் நல்லெண்ண வருகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி நல்வாழ்த்துகளுடன் திசைகளுக்கு கேடிஎம்பி உயர் அதிகாரிகள் நல்லெண்ண வருகை

மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி நிறுவனத்துக்கும் திசைகள் ஊடக நிறுவனத்துக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், தீபாவளித் திருநாளை முன்னிட்டு கேடிஎம்பியின் உயர் அதிகாரிகள் திசைகள் அலுவலகத்திற்கு நல்லெண்ண வருகை மேற்கொண்டனர்.

கேடிஎம்பியின் வியூகத் தொடர்பு நிர்வாகி அடில் அய்ஸுடின் முஹமட் யுசோஃப் தலைமையில், நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த முஹமட் இக்மால் முஹமட் மற்றும் நிர்வாக உதவியாளர் சிக் நூர் ஃபஹீரா ஜஸ்னி ஆகியோர் இவ்வருகையில் கலந்துகொண்டனர்.

காலை 10 மணியளவில் திசைகள் அலுவலகத்திற்கு வருகை தந்த அதிகாரிகளை, திசைகள் நிர்வாக இயக்குநர்களான ஜி.கே. பசுபதி, கண்மணி, ஆசிரியர் இ.எம். சாமி, நிர்வாகி இரா. சங்கீதா மற்றும் பணியாளர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கேடிஎம்பி அண்மையில் வெளியிட்ட தீபாவளிச் சிறப்புக் காணொளி, நிறுவனத்தின் சேவைகளின் தரம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து வியூகத் தொடர்பு நிர்வாகி அய்டில் அய்ஸுடின் விளக்கமளித்தார்.

இதற்கிடையே, திசைகள் ஊடகத்தின் செய்திச் செயல்பாடுகள், முன்னெடுத்து வரும் பல்வேறு திட்டங்கள், திசைகளின் வாராந்திர சஞ்சிகை, ஊடக வளர்ச்சிக்கான முயற்சிகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேடிஎம்பி அதிகாரிகள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

இது தொடர்பான விளக்கங்களைத் திசைகள் நிர்வாக இயக்குநர் ஜி.கே. பசுபதியும் ஆசிரியர் இ.எம். சாமியும் வழங்கினர்.

நட்புறவும் பரஸ்பர புரிந்துணர்வும் நிறைந்த சூழலில் நடைபெற்ற இச்சந்திப்பு, கேடிஎம்பிக்கும் திசைகள் ஊடகத்திற்கும் இடையிலான நல்லுறவையும் ஊடகத் தொடர்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

வருகை தந்த கேடிஎம்பி அதிகாரிகளுக்குத் திசைகள் நிர்வாகத்தின் சார்பில் காலைச் சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திசைகள் பணியாளர்களுக்குத் தங்களது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட கேடிஎம்பி அதிகாரிகள், அன்பளிப்புகளையும் வழங்கினர்.

அவர்களின் நல்லெண்ண வருகைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திசைகள் சார்பில் நிர்வாக இயக்குநர்களான ஜி.கே. பசுபதியும் கண்மணியும் கேடிஎம்பி அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →