Nov 3, 2026
Thisaigal NewsYouTube

காஜாங் பிரிமாவில் களைகட்டும் தீபாவளி கார்னிவல் 2026

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காஜாங் பிரிமாவில் களைகட்டும் தீபாவளி கார்னிவல் 2026

சி.ஆர். கார்த்திக்கின் ஏற்பாட்டில், ஐந்தாவது ஆண்டாகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது காஜாங் பிரிமா தீபாவளி கார்னிவல் 2026.

காஜாங் பிரிமாவில் அக்டோபர் 31 ஆம் தேதி மக்கள் பெரியளவில் திரண்ட நிலையில் மறுநாள் நவம்பர் 1 ஆம் தேதியும் மக்கள் பெரியளவில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல தரப்புப்பட்ட கேளிக்கை நிகழ்வுகள், வர்ணம் தீட்டுதல் போன்ற ஏற்பாடுகளும் அமர்களமாக நடைபெற்றன. சிறந்த ஆளுமையை வெளிப்படுத்திய அனைவருக்கும் பரிசுகள், ஆங் பாவ், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

குறிப்பிடத்தக்க அம்சமாக லாக்கப் டீம், சைக்கோ மந்த்ரா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி எனப் பல்வேறு சிறப்பு அங்கங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன.

தீபாவளி கார்னிவலின் மற்றுமொரு சிறப்பம்சமாக, வரும் நவம்பர் 5ஆம் தேதி பாடகர் டிலீப் வர்மனின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் நடைபெறும் அதிர்ஷ்டக் குலுக்கலில், B40 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு தம்பதியருக்கு, தலா 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான இரண்டு இலவசத் திருமணப் பேக்கேஜ்களை வழங்குகிறார் சி.ஆர். கார்த்திக்.

உணவு, குருக்கள் சேவை, மேளதாளம், DJ, அலங்காரம், புகைப்படச் சேவை எனப் பல வசதிகளுடன், 500 பேர் அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட எஸ்கே சய் பங்கேட் ஹால் மண்டபத்தில் இந்தத் திருமண ஏற்பாடுகள் வழங்கப்படுகின்றன. இந்த மண்டபங்கள், செர்டாங் மற்றும் சிரம்பானில் அமைந்துள்ளன.

மடானி இந்தியன் வெடிங் பாக்கேஜ் என்ற பெயரில் வழங்கப்படும் இந்த சிறப்புத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து நிகழ்ச்சியின் போது, சி.ஆர். கார்த்திக் நேடியாகவே அறிவித்தார்.

சமூகத்தினரின் மகிழ்ச்சியையும், ஏழை எளிய குடும்பங்களின் திருமணக் கனவுகளையும் முன்னிறுத்தும் இந்த முயற்சியுடன், காஜாங் பிரிமா தீபாவளி கார்னிவல் நவம்பர் 6ஆம் தேதி நிறைவடைகிறது என்பதையும் சி.ஆர். கார்த்திக் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
கேட்பரி ஆதரவுடன் பேக்கிங் தொழிலில் சாதித்த பெண்கள், அடுத்த தலைமுறை பெண் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுகின்றனர்

கேட்பரி ஆதரவுடன் பேக்கிங் தொழிலில் சாதித்த பெண்கள், அடுத்த தலைமுறை பெண் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுகின்றனர்

பேராக் இந்திய சமூகத்தின் நலனுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை

பேராக் இந்திய சமூகத்தின் நலனுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை

தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்

தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்

பாகான் டத்தோ தொகுதி தீபாவளிக் கொண்டாட்டம்: 2000 பி40 குடும்பங்களுக்கு அன்பளிப்புகள் விநியோகம்

பாகான் டத்தோ தொகுதி தீபாவளிக் கொண்டாட்டம்: 2000 பி40 குடும்பங்களுக்கு அன்பளிப்புகள் விநியோகம்

தீபாவளியை முன்னிட்டு 360 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் கூடைகள் – டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி தலைமையில் உதவிகள் வழங்கப்பட்டன

தீபாவளியை முன்னிட்டு 360 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் கூடைகள் – டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி தலைமையில் உதவிகள் வழங்கப்பட்டன

பினாங்கின் வளர்ச்சிக்கு ஒற்றுமையும் நல்லிணக்கமுமே அடித்தளம் – சாவ் கொன் இயோவ்

பினாங்கின் வளர்ச்சிக்கு ஒற்றுமையும் நல்லிணக்கமுமே அடித்தளம் – சாவ் கொன் இயோவ்