Nov 3, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், கருணை இல்லத்தில் வசிக்கும் சிறார்களுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக, சிறார்களுக்குப் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்ததுடன், அவர்களுடன் கடல் உணவு உணவகத்தில் இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.

மேலும், சிறார்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்ததோடு, தீபாவளிப் பரிசாகப் பணமும் வழங்கி மகிழ்வித்தார்.

பரிசுகளை வழங்குவதைவிட, அன்பையும் அக்கறையையும் பகிர்ந்து அவர்களுடன் நேரம் செலவிடுவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த ராஜி சில்க் பேலஸ் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், உள்ளூர் வணிகர்களிடம் பொருட்களை வாங்குவதன் மூலமும், உள்ளூர் உணவகங்களை ஆதரிப்பதன் மூலமும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க முடியும் என்பதையும் இந்த முயற்சி எடுத்துக் காட்டுகிறது.

சமூகம் சமூகத்திற்கு ஆதரவாக! என்ற உயரிய சிந்தனையுடன் இந்தத் தீபாவளி நிகழ்ச்சி அமைந்தது.

கருணை இல்ல குழந்தைகளுடன் இணைந்து பிரகாஷ் சம்புநாதன், தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
காஜாங் பிரிமாவில் களைகட்டும் தீபாவளி கார்னிவல் 2026

காஜாங் பிரிமாவில் களைகட்டும் தீபாவளி கார்னிவல் 2026

கேட்பரி ஆதரவுடன் பேக்கிங் தொழிலில் சாதித்த பெண்கள், அடுத்த தலைமுறை பெண் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுகின்றனர்

கேட்பரி ஆதரவுடன் பேக்கிங் தொழிலில் சாதித்த பெண்கள், அடுத்த தலைமுறை பெண் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுகின்றனர்

பேராக் இந்திய சமூகத்தின் நலனுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை

பேராக் இந்திய சமூகத்தின் நலனுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை

பாகான் டத்தோ தொகுதி தீபாவளிக் கொண்டாட்டம்: 2000 பி40 குடும்பங்களுக்கு அன்பளிப்புகள் விநியோகம்

பாகான் டத்தோ தொகுதி தீபாவளிக் கொண்டாட்டம்: 2000 பி40 குடும்பங்களுக்கு அன்பளிப்புகள் விநியோகம்

தீபாவளியை முன்னிட்டு 360 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் கூடைகள் – டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி தலைமையில் உதவிகள் வழங்கப்பட்டன

தீபாவளியை முன்னிட்டு 360 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் கூடைகள் – டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி தலைமையில் உதவிகள் வழங்கப்பட்டன

பினாங்கின் வளர்ச்சிக்கு ஒற்றுமையும் நல்லிணக்கமுமே அடித்தளம் – சாவ் கொன் இயோவ்

பினாங்கின் வளர்ச்சிக்கு ஒற்றுமையும் நல்லிணக்கமுமே அடித்தளம் – சாவ் கொன் இயோவ்