Nov 3, 2026
Thisaigal NewsYouTube

பேராக் இந்திய சமூகத்தின் நலனுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேராக் இந்திய சமூகத்தின் நலனுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை

பேராக் மாநில இந்திய சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளதாக மாநில இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

கல்வி, சமூக மற்றும் சமய விவகாரங்களுக்குக் கூடுதல் நிதி வழங்குமாறு மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும், இம்மாதம் 24ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மாநில வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான கூடுதல் ஒதுக்கீடு இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

நேற்றிரவு தனது சட்டமன்றத் தொகுதியான சுங்கையில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ சிவநேசன் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், தாப்பா, முவாலிம் மற்றும் பத்தாங் பாடாங் பகுதிகளில் முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கான மயான வசதி அமைக்கும் திட்டம் 80 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், டேவான் முஹிபா மண்டபம் கடந்த ஆண்டு 10 லட்சம் ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்து மற்றும் சீக்கிய வழிபாட்டுத் தலங்களின் மேம்பாட்டிற்காக 2 கோடியே 40 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 23 ஆலயங்களின் நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டத்தோ சிவநேசன் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
காஜாங் பிரிமாவில் களைகட்டும் தீபாவளி கார்னிவல் 2026

காஜாங் பிரிமாவில் களைகட்டும் தீபாவளி கார்னிவல் 2026

கேட்பரி ஆதரவுடன் பேக்கிங் தொழிலில் சாதித்த பெண்கள், அடுத்த தலைமுறை பெண் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுகின்றனர்

கேட்பரி ஆதரவுடன் பேக்கிங் தொழிலில் சாதித்த பெண்கள், அடுத்த தலைமுறை பெண் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுகின்றனர்

தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்

தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்

பாகான் டத்தோ தொகுதி தீபாவளிக் கொண்டாட்டம்: 2000 பி40 குடும்பங்களுக்கு அன்பளிப்புகள் விநியோகம்

பாகான் டத்தோ தொகுதி தீபாவளிக் கொண்டாட்டம்: 2000 பி40 குடும்பங்களுக்கு அன்பளிப்புகள் விநியோகம்

தீபாவளியை முன்னிட்டு 360 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் கூடைகள் – டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி தலைமையில் உதவிகள் வழங்கப்பட்டன

தீபாவளியை முன்னிட்டு 360 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் கூடைகள் – டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி தலைமையில் உதவிகள் வழங்கப்பட்டன

பினாங்கின் வளர்ச்சிக்கு ஒற்றுமையும் நல்லிணக்கமுமே அடித்தளம் – சாவ் கொன் இயோவ்

பினாங்கின் வளர்ச்சிக்கு ஒற்றுமையும் நல்லிணக்கமுமே அடித்தளம் – சாவ் கொன் இயோவ்