Oct 18, 2025
Thisaigal NewsYouTube
கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விநியோகச் சங்கிலித் திட்டம் ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெறுகிறது
சிறப்பு செய்திகள்

கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விநியோகச் சங்கிலித் திட்டம் ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெறுகிறது

Share:

செனாவாங், மார்ச்.14-

MiSI (மலேசிய இந்திய திறன்கள் முன்முயற்சி) மூலம் செனாவாங்கின் ஃபாரஸ்ட் ஹைட்ஸில் மார்ச் 5 முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விநியோகச் சங்கிலித் திட்டம், தென் பகுதி பங்கேற்பாளர்களிடமிருந்து மிகவும் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்தத் திட்டம் கிடங்கு நிர்வாகம், சில்லறை விற்பனைச் செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி நிர்வாகமா ஆகியவற்றில் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இது தொழில்துறையில் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.

ஐந்து நாள் பயிற்சி நெடுகிலும், பங்கேற்பாளர்கள் பொருள் மற்றும் கிடங்கு நிர்வாகம், SOP எனப்படும் தர செயல்பாட்டு நடைமுறைகளுடன் இணங்குதல், தொழில்துறை-தரநிலை செயல்பாடுகள், பொருட்கள் பொட்டலமிடுதல், விற்பனை நுட்பங்கள் மற்றும் ஆர்டர் நிர்வாகம் உள்ளிட்டவைகள் வாயிலாக அரிய திறன்களைப் பெற்றனர். கிடங்குகள் முதல் பயனீட்டாளர்கள் வரையிலான முழு விநியோகச் சங்கிலி சுற்றுச்சூழல் அமைப்பையும் புரிந்துகொள்ள உதவும் வகையில், தயாரிப்புகளைத் திறமையாக ஒழுங்கமைத்து கையாள்வதற்கான சிறந்த நடைமுறைகளையும் அவர்கள் கற்றுக் கொண்டனர். பங்கேற்பாளர்கள் அத்திட்டத்தில் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தினர். லோஜிஸ்திக் செயல்பாடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிர்வாகம் பற்றிய தெளிவான புரிதலை அப்பயிற்சி வழங்கியதாக அவர்கள் கூறினர். அப்புதியத் திறன்களை நேரடியாக தங்கள் வேலைகளில் பயன்படுத்த அனுமதிக்கும் நடைமுறை கற்றல் அனுபவத்தால் அவர்கள் உற்சாகமாகமடைந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதி நாளில், ராசா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் YB சா கீ சின் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் YB குணா ஆகியோர் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினர். கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விநியோகச் சங்கிலித் துறைகளில் திறன் மேம்பாட்டிற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர்கள் ஊக்கமளிக்கும் உரைகளை நிகழ்த்தினர். தங்கள் அறிவைப் பயன்படுத்தி தங்கள் தொழில்களில் முன்னேறவும், மலேசியாவின் சில்லறை விற்பனை மற்றும் லோஜிஸ்திக் துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்க அவர்கள் பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தினர். பங்கேற்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழுடன், தங்கள் தொழில் வாழ்க்கையை விரிவுபடுத்துவதிலும், வேலை சந்தையில் தங்கள் வேலை வாய்ப்பை மேம்படுத்துவதிலும் கூடுதல் அனுபவம் பெற்றுள்ளனர்.

Related News

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி