Nov 13, 2026
Thisaigal NewsYouTube

ஆட்டிசம் மாணவர்களின் திறனை வளர்க்கும் கிள்ளான் ரோட்டரி கிளப்: சுங்கை ஊடாங் தேசியப் பள்ளியில் நவீன வசதிகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆட்டிசம் மாணவர்களின் திறனை வளர்க்கும் கிள்ளான் ரோட்டரி கிளப்: சுங்கை ஊடாங் தேசியப் பள்ளியில் நவீன வசதிகள்

கிள்ளான் வட்டாரப் பள்ளிகளில் பயிலும் ஆட்டிசம் குழந்தைகளின் தனித்திறன்களை வளர்க்கும் நோக்கில், கிள்ளான் ரோட்டரி கிளப், மல்டி சென்சொரி வகுப்பறை திட்டத்தின் மூலம் நவீன கட்டமைப்பு மற்றும் சிறப்புப் பயிற்சி வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

இத்திட்டம் குறித்து கிள்ளான் ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ் சச்சிதானந்தம் கூறுகையில், கிள்ளான் வட்டாரத்தில் மொத்தம் ஐந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆட்டிசம் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி மற்றும் பாடத்திட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதில் சுங்கை ஊடாங் தேசியப் பள்ளி மூன்றாவது பள்ளியாக இணைந்துள்ளது. இதற்கு முன்னதாக புக்கிட் கெமுனிங் 2 தேசியப் பள்ளியில் இத்தகைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக செந்தோசா தமிழ்ப்பள்ளி மற்றும் மற்றுமொரு பள்ளிக்கும் இந்த வசதிகள் விரைவில் செய்து கொடுக்கப்பட உள்ளன.

ரோட்டரி இன்டர்நேஷனல் குளோபல் அமைப்பின் நிதி, இதர கிளப்புகள் மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், கல்வி அமைச்சை வியூக சகாவாக கொண்டு, அதன் அங்கீகாரத்துடன், சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா மற்றும் கிள்ளான் கல்வி அலுவலகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று சுங்கை ஊடாங் தேசியப்பள்ளி வளாகத்தில் திசைகளிடம் சுரேஷ் சச்சிதானந்தம் விவரித்தார்.

ஆட்டிசம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களைத் தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று சுரேஷ் சச்சிதானந்தம் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
தீபாவளியை முன்னிட்டு லெ மெரிடியன் புத்ராஜெயாவில் இந்திய உணவு விருந்து

தீபாவளியை முன்னிட்டு லெ மெரிடியன் புத்ராஜெயாவில் இந்திய உணவு விருந்து

சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

2027 புதிய கல்வித் திட்ட சர்ச்சை: கல்வித் துணை அமைச்சருடன் அவசரச் சிறப்புக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

2027 புதிய கல்வித் திட்ட சர்ச்சை: கல்வித் துணை அமைச்சருடன் அவசரச் சிறப்புக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

தீபாவளி திருநாளிலும் ஓய்வில்லா அழகுக் கலை நிபுணர்கள்: குடும்பத்தையும் தியாகம் செய்து வாடிக்கையாளர்களுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பு

தீபாவளி திருநாளிலும் ஓய்வில்லா அழகுக் கலை நிபுணர்கள்: குடும்பத்தையும் தியாகம் செய்து வாடிக்கையாளர்களுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பு

அம்மாவின் அன்பை மதியுங்கள்; தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்புங்கள்!” – அன்வார் உருக்கமான வேண்டுகோள்

அம்மாவின் அன்பை மதியுங்கள்; தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்புங்கள்!” – அன்வார் உருக்கமான வேண்டுகோள்